மைக்ரோமேக்ஸ் இன்போர்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான YU நிறுவனம் YU YUPHORIA என்ற ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது முதல் கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நுழைந்துள்ளது.

18ஆயிரத்து 499ரூபாய் விலையில், 40 இன்ச் முழு HD ஸ்மார்ட் LED டிவியான YU YUPHORIA, தற்போது அமேசான் இந்தியா இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த புதிய டிவி குறித்து மைக்ரோ இன்பர்மேடிக்ஸ் லிமிட்டெட்., நிறுவன துணை நிறுவனர் ராஜேஷ் அக்வர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய டிவி-க்கள், பயன்படுத்துபவர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து மீடியாக்களை காஸ்ட் செய்து கொள்ள உதவும். இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை என்றார்.

இந்த ஸ்மார்ட் டிவி குறித்து நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், இந்த புதிய ஸ்மார்ட் டிவிக்கள் குவாட் கோர் பிராசசர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் அதிவிரைவாக செயல்படும். மேலும் இதில் உள்ள Airplay மூலம் ஆப்பிள் டிவைஸ்களில் இருந்து மீடியா மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும். மேலும் இந்த டிவியை வயர்லஸ் ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.