முதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை  அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்

மைக்ரோமேக்ஸ் இன்போமெடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், முதல் முறையாக கூகிள் சர்டிபிகேட் பெற்ற இரண்டு ஆண்டிராய்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. 49 இன்ச் மற்றும் 55 இன்ச் என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ள இந்த டிவிகளின் விலை முறையே 51,990 மற்றும் 61 ஆயிரத்து 990 ரூபாயாகும்.

இதுகுறித்து பேசிய மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இயக்குனர் ரோஷன் அகர்வால்,  புதிய வகை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டிராய்டு தகவல்களை அதிகளவிலும், தெளிவாகவும் கொடுக்கும் நோக்கில் கூகிள் சர்டிபிகேட் பெற்ற ஆண்டிராய்டு டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக கூகிள் அங்கீகாரம் பெற்ற ஆண்டிராய்டு டிவிகளை  அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்

இந்த புதிய டிவிக்கள் உயர் தரம் கொண்ட தொழில்நுட்பங்களுடன், சிறந்த தரத்தில் படங்கள் மற்றும் டிவி ஹவுஸ் மூலம் அதிகாரப்பூர்வ கூகிள் பிளே ஸ்டோர், கேம்ஸ், மூவிஸ் போன்றவற்றை பெற்றிருக்கும்.

மேலும் இந்த டிவிக்கள் ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டம் மூலம் இயங்கும், டால்பி மற்றும் DTS சர்டிபிகேட் பெற்றுள்ளது. மேலும் இது குவாட் கோர் A53 பிரசாசர், 2.5 GB DDR3 ரேம் மற்றும் 16 GB EMMC பிளாஷ் ரோம், பில்ட் இன் குரோம்காஸ்ட் மற்றும் வயர்லஸ் ஸ்மார்ட் கண்ட்ரோல் போன்றவை இடம் பெற்றுள்ளது.

இந்த டிவிக்கள் இந்த மாதத்தில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.