2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்

உலகின் முதலாவது cadmium-free Quantum Dot தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்திய Samsung QLED தொலைக்காட்சிகள், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. மேம்படுத்தப்பட்ட காட்சித் தரம், வடிவமைப்பு, இணைப்பு மற்றும் சாதுர்யம் போன்ற அம்சங்களுடன் 2018 QLED தொலைக்காட்சிகள் உண்மையில் எல்லையற்ற தொலைக்காட்சி அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

100 வீதம் நிறத்திறன் மற்றும் நுணுக்கமான விபரங்களை தெளிவாகக் காட்டும் HDR10+ செயற்பாட்டுத் திறனுடன் அபரிமிதான காட்சித் தரத்தை வழங்கும் விதத்தில் புதிய தொலைக்காட்சி வகைகள் உள்ளன. மெல்லிய, வழுவழுப்பான மற்றும் முதன்மை உலோக கவசத்துடன், ஓரங்களற்ற காட்சித்திரையுடன், அளவற்ற நுட்பங்களுடன் QLED தொலைக்காட்சிகள் அமையப் பெற்றுள்ளன.

வியத்தகு காட்சித் தரத்தை உருவாக்குவதற்கு, காட்சித்திரை நேர்த்தியான வெளிச்சத்தைப் பெறும் வகையில் தொலைக்காட்சியானது Direct Full Array backlighting தொழிநுட் பத்தை கொண்டிருக்கின்றது. இது blooming மற்றும் halo தன்மையினை குறைத்து, inky blacks மற்றும் brilliant whites என்பவற்றுடன் ஆழமான வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. எந்த கோணத்தில் இருந்தும் தொலைக்காட்சிகளின் சிறந்த காட்சித் தரத்தினை அனுபவிப்பதற்கு மேம்படுத்தப்பட்ட Anti-reflection தொழிநுட்பம் உறுதி செய்கின்றது. இலங்கையில் 65 அங்குலங்கள் வரையான காட்சித் திரை வகைகளுடன், புதிய தயாரிப்புக்கள், காட்சியின் உள்ளடக்கத்தை UHD மட்டங்களுக்கு இயல்பாகவே அதிகரிக்கும் Q Engine தொழிநுட்பமானது, பார்வையாளர்களின் அனுபவத்தை மகிழ்வாக்கும்.

2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்

இந்த வகையுடன் Ambient Mode இனையும் Samsung அறிமுகம் செய்கின்றது. இதன் ஊடாக QLED TV தொலைக்காட்சியினை உங்களுடைய மனநிலைக்கு ஏற்ற வகையில் காட்சித் திரையை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியை ஏற்படுத்தி தருகின்றது. சுவருடன் தொலைக்காட்சி சேர்ந்து கொள்ளும் மிகச் சிறந்த காட்சி பண்பை உருவாக்கும் வகையில் தொலைக்காட்சி அமையும்.

வெப்பநிலை அல்லது மழைக் காலநிலை போன்ற வானிலையையும் தாமாகவே தொலைக்காட்சி தரும். மேலும், உங்களுடைய புகைப்படங்கள், அல்லது அழகிய புகைப்படங்களின் ஊடாக தொலைக்காட்சியின் பின்காட்சி திரையை உங்களால் ஒழுங்கு செய்து கொள்ளவும் முடியும். QLED தொலைக்காட்சியின் ரிமோட்டில் hotkey இனை அழுத்துவதன் ஊடாக மிக எளிதாக Ambient Mode இற்கு மாற்ற முடியும்.

2018 சாம்சங் QLED தொலைக்காட்சியில் இடம் பெற்றுள்ள புதிய அம்சங்கள்

ஒரேயொரு எளிதில் விளங்காத கேபிள் ஊடாக தொலைக்காட்சிக்கான மின்சக்தி மற்றும் தரவுகளை பரிமாற்றிக் கொள்ளும் வசதியையும் QLED கொண்டிருக்கின்றது. இந்த விரைவான, அதி வேக மற்றும் எதிர்காலத்தின் கேபிள்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு விரும்பிய இடத்தில் தொலைக்காட்சியை வைத்துக் கொள்ளவும், தொலைக்காட்சியுடன் பொருத்தும் ஏனைய சாதனங்களை வேறிடத்திலும் வைத்துக் கொள்ள முடியும்.

வீட்டின் ஸ்மாட் தொழிநுட்ப சாதனங்களுடன் விரைவாக இணைக்கக் கூடிய விதத்தில் QLED தொலைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொலைக்காட்சியின் உலகளாவிய வழிகாட்டி சேவைகள், தொலைக்காட்சியில் இருந்து உள்ளடக்கங்களைப் பெற்று, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனுபவிக்கக் கூடிய சிறந்த காட்சி அனுபவத்தையும் வழங்குகின்றது.

இப்பொழுது Singer, Softlogic, Singhagiri, Damro காட்சியறைகளில் மற்றும் நாடுமுழுவதும் உள்ள முகவர்களிடம் இப்புதிய QLED வகை தொலைக்காட்சிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.