இந்தியாவில் 8K 'புரோப்பசனல் டிஸ்பிளே'-வை அறிமுகம் செய்தது  ஷார்ப் நிறுவனம்

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஷார்ப் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள துணை நிறுவனமான ஷார்ப் இந்தியா நிறுவனம், இந்தியாவில் நடந்த இன்போகாம் 2018-ல் 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’-வின் விலை 20 லட்சமாக இருக்கும். “LV-70X500E”-வின் பி2பி (பிசினஸ் டு பிசினஸ்) பொருட்கள் மற்றும் இவை 8K உயர்ந்த ரெசலுசன் LCD பேனல்களுடன் 16 முறை அதிக ரெசலுசன் கொண்ட முழு HD வடிவில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 8K 'புரோப்பசனல் டிஸ்பிளே'-வை அறிமுகம் செய்தது  ஷார்ப் நிறுவனம்

இதுகுறித்து ஷார்ப் இந்தியா நிறுவன உயர் அதிகாரி, ஷின்ஜி மினடோகாவா வெளியிட்டுள்ள அறிக்கையில், 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’ சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு முன்னேடியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், 8K ‘புரோப்பசனல் டிஸ்பிளே’ அறிமுகம் செய்துள்ளதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 8K 'புரோப்பசனல் டிஸ்பிளே'-வை அறிமுகம் செய்தது  ஷார்ப் நிறுவனம்

ஷார்ப் கார்ப்பரேஷன், சர்வதேச அளவில் நெட்வோர்கே மல்டி பங்சன் ஆபீஸ் சொலிசன்களை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் “தாம்சன் ரியட்டர்ஸ் டாப் 100 குளோபல் தொழில்நுட்ப் தலைவர்” விருது வழங்கும் விழாவில் கவுரவிக்கப்பட்டது.