ஜியோ பிரைம் சேவைக்கு எதிராக ஏர்டெல், வோடாபோன், மற்றும் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ள அதிரடி 4ஜி டேட்டா சலுகைகளில் உள்ள நிபந்தனைகள் முழுவிபரம் அறிந்து கொள்ளலாம்.

அன்லிமிடேட் டேட்டா 4ஜி

இந்திய தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் வரவுக்கு பின்னர் பல்வேறு விதமான டேட்டா சலுகைகள் மற்றும் இலவச வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏர்டெல் , வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் வழங்குவதாக அறிவித்துள்ள அன்லிமிடேட்  4ஜி டேட்டா குறித்தான முழு நிபந்தனைகள் மற்றும் விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் 4ஜி

ஏர்டெல் 4ஜி டேட்டா சேவையில் ரூ. 345 கட்டணத்தில் வழங்குகின்ற வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.  தினசரி பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்ற 1ஜிபி டேட்டாவில் பகல் நேரங்களில் 500எம்பி , இரவு நேரத்தில் 500எம்பி டேட்டா வழங்குகின்றது. இந்த சேவை தொடர்ந்து அடுத்த 11 மாதங்களுக்கு பெற வேண்டுமெனில் மார்ச் 31க்குள் முதல் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.

ரூ.345 பிளான் குறிப்புகள் :-

 • வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
 • தினசரி 1ஜிபி டேட்டா (பகல் -500MB  இரவு – 500MB (12AM-6AM) )
 • வேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே
 • இந்த பேக் 4ஜி மொபைல்பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.
 • முதல் ரீசார்ஜ் மார்ச் 31க்குள் செய்வது அவசியம்

வோடாபோன் 4ஜி

ரூ.346 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள வோடாபோன் 4ஜி டேட்டா பிளான் சலுகை வருகின்ற மார்ச் 15ந் தேதி வரை மட்டுமே இந்த செக்மென்டேட் வெல்கம் சலுகை கிடைக்கும். இந்த சலுகையில் 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா வழங்குகின்றது.

ரூ.346 பிளான் குறிப்புகள் :-

 • வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
 • தினசரி 1ஜிபி டேட்டா
 • வேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே
 • இந்த பேக் 4ஜி மொபைல்பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.
 • மார்ச் 15 வரை மட்டுமே

ஐடியா 4ஜி

ஐடியா 4ஜி சேவையில் ரூ.345 கட்டணத்தில் 14 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது. தினசரி பயன்பாட்டுக்கு 500எம்பி டேட்டா வழங்குகின்றது.  இதில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குகின்றது. இந்த பேக் குறிப்பிட்ட சில ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஐடியா ஆப் வழியாக மட்டுமே பெறலாம்.

ரூ.345 பிளான் குறிப்புகள் :-

 • வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்
 • தினசரி 500MB டேட்டா
 • வேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே
 • இந்த பேக் 4ஜி மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.
 • ஐடியா ஆப் வழியாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

ஜியோ பிரைம்

ரூ.99 கட்டணத்தில் மார்ச் 31, 2017க்குள் ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் வாயிலாக சுமார் 1 வருடத்திற்கு சிறப்பு சலுகையில் மாதந்தோறும் டேட்டா பெறலாம். ரூ.303 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா அதன்பிறகு 128Kbps வழங்குகின்றது. மேலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குகின்றது. இதுதவிர ரூ.19 முதல் ரூ. 9999 பல்வேறு விதமான  கட்டணத்தில்  வழங்குகின்றது.