சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு விடுமுறை தொடங்கியுள்ளதை நினைவுப்படுத்தும் வகையில் December global festivities என்ற பெயரில் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய டிசம்பர் திருவிழாக்கள்

வருகின்ற டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் தினம் என இயேசு பிறந்த நாளை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 12 நாட்களுக்கு விடுமுறை கொண்டாட்டம் என்பதனால் அதனை கொண்டாடும் வகையில், பென்குயின் மற்றும் கிளிகளை பின்புலமாக கொண்டு கேலி சித்திரம் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வரலாறு

இயேசு கிறிஸ்து அவர்களின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி பற்றி அறிவோம்.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாக அறியப்படுகின்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி நாள்தோறும் ஒரு சிறப்பு டூடுலை ஜனவரி 1, 2018 வரை கூகுள் வெளியிட உள்ளது.