மலிவு விலையில் இரண்டு டெல் இன்ஸ்பிரான் 5000 லேப்டாப்கள் அறிமுகம்

இந்திய சந்தையில் டெல் இன்ஸ்பிரான் 5000 வரிசையில் டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 என இரு லேப்டாப் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் பிளாட்டினம் சில்வர், பர்கண்டி  மற்றும் இன்க் நிறங்களில் கிடைக்க உள்ளது.

இளைய தலைமுறை பயனாளர்களை குறிவைத்து சுமார் 1.48 கிலோ கிராம் எடை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாடல்களில் 1080 பிக்சல் தீர்மானத்துடன் டெல் இன்ஸ்பிரான் 5480 மாடல் 14-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 மாடல் 15-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே பெற்று விளங்குகின்றது.

இரு லேப்டாப் மாடல்களிலும் மிக சிறப்பான செயல் திறன் வழங்கும் வகையில் 8வது தலைமுறை விஸ்கி லேக் இன்டெல் கோர் பிராசஸரை பெற்று Core i3, Core i5 மற்றும் Core i7 பிராசஸர் மாறுபாடுகளில்  32GB of DDR4 ஸ்டோரேஜ் பெற்று இன்ட்ரனல் மெமரி 2TB (இன்ஸ்பிரான் 5580) மற்றும் 1TB (இன்ஸ்பிரான் 5480) கொண்டுள்ளது. கொண்டதாக விளங்குகின்றது.  HDMI போர்ட், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. 3-Cell 42WHr திறன் பெற்ற பேட்டரி இடம் பெற்றுள்ளது.

டெல் இன்ஸ்பிரான் 5000 விலை பட்டியல்

டெல் இன்ஸ்பிரான் 5480 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.36,990

டெல் இன்ஸ்பிரான் 5580 சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.37,990

(ஜிஎஸ்டி வரி இல்லாமல்)