கூகுள் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் கூகுள் டாக்ஸ் மூலம் புதிய  பிஷிங் அட்டாக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிஷிங் வாயிலாக உங்கள் தனியுரிமை தகவலுடன் ஸ்பேம் மெசேஜ்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஜிமெயில்

ஜிமெயில் வாயிலாக ஸ்பேம் மெசேஜ் வந்திருந்தால் (open google docs) என்ற பெயரில் வந்திருந்தால் அதனை திறந்தால் கூகுள் ஆப் அனுமதியை பெற்று தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடிவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேவையற்ற அனுமதி எதேனும் கூகிள் கணக்கில் ஆப்ஸ் வாயிலாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என சோதிக்க இந்த பகுதியில் —> https://myaccount.google.com/permissions காணலாம்.

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்பொழுது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.