ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

தற்போது வெளியாகும் அனைத்து ஆண்டிராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்கள் உள்ளன. இதன் மூலம் பயனாளர்கள் இரண்டு வெவ்வேறு நம்பர்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகாரப்பூர்வமாக ஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி இல்லை. இருந்த போதும் சியோமி, சாம்சங், விவோ, ஒபோ, ஹவாய் மற்றும் ஹானர் போன்ற ஸ்மார்ட் போன்கள், டூயல் ஆப்ஸ் அல்லது டூயல் மோட் ஆப்சன்கள் உள்ளது. இந்த ஆப்சன்கள் இரண்டு வெவ்வேறு வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது.

இந்த ஆப்சன்களை எப்படி பயன்படுத்தி, ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் அக்வுண்ட்களை பயன்படுத்தலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

சாம்சாங் ஸ்மார்ட் போனில் டூயல் மேஜென்சர் ஆப்சனில் இதை எளிதாக செய்து கொள்ள முடியும். இதற்கு Settings > Advance features > Dual Messenger ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.

சியோமி (MIUI) ஸ்மார்ட் போன்’களில் இந்த வசதிக்காக டூயல் ஆப்ஸ் ஆப்சன் உள்ளது. இந்த ஆப்சனை Settings > Dual Apps என்ற டேப்பில் சென்று செய்து கொல்லாம்.

ஒபோ ஸ்மார்ட் போன்களை இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

விவோ ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற க்ளோன் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Clone Apps என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

அசுஸ் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற டூவின் ஆப்ஸ் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings > Twin apps
என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

ஹவாய் ஸ்மார்ட் போன்களில் இந்த வசதியை பெற ஆப் டூவின் என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும். இதற்கு Settings> App Twin என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

தற்போது இந்த ஆப்சன்களை எப்படி பயன்படுத்தி இரண்டு வாட்ஸ்அப்-களை பயன்படுத்துவது என்பதை கீழே பார்க்கலாம்.

1. ஸ்மார்ட் போன்களில் டூயல் ஆப் செட்டிங்கை ஒபன் செய்து கொள்ள வேண்டும்.
2. இதில் எந்த அப்ளிகேஷனை நீங்கள் டுப்ளிகேட் செய்ய விரும்புகிறீர்களோ அதை செலக்ட் செய்ய வேண்டும் ( ஒருவேளை நீங்கள் வாட்ஸ்அப்-ஐ செலக்ட் செய்தால்)
3. ஸ்மாட்போன் பிராசசஸ் ஆகும் வரை காத்திருக்கவும்
4. தற்போது, உங்கள் ஹோம் ஸ்கிரீனுக்கு சென்று, இரண்டாவது வாட்ஸ்அப் லோகோவை ஒபன் செய்ய வேண்டும்.
5. இதில் உங்களது மற்றொரு நம்பரை பதிவு செய்து கன்பிகர் செய்ய வேண்டும்.

இந்த ஆப்சன்கள் சில போன்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது தெரிந்து கொள்வது அவசியமாகும். இதுமட்டுமின்றி சில அப்ளிகேஷன்கள் பேர்லல், டூயல் அப் விசார்ட், டபுள்அப் போன்ற அப்ளிகேஷன்கள் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது அவற்றை பயன்படுத்தியும் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்களை பயன்படுத்தலாம்.