7 ஆண்டுகள் பழைய கூகுள் ஆண்ட்ராய்டு 2.1 எக்லெயர் மற்றும் அதற்கு முந்தைய குறைந்த பதிப்பு இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்திக் கொள்ள கூகுள் முடிவெடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு 2.1

7 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள்  2.1 எக்லெயர் மற்றும் அதற்கு குறைந்த இயங்குதளங்களுக்கான சேவைகளான கூகுள் ப்ளே ஆப் ஸ்டோர் வாயிலாக ஆப் இன்ஸ்டால் செய்யும் வசதி மற்றும் அதனை பயன்படுத்துவதற்கான வசதியும் முற்றிலுமாக ஜூன் 30ந் தேதிக்கு பிறகு முற்றிலும்  நிறுத்திக் கொள்ளப்படும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் டெவெலப்பர் பிளாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகவும் பழைய இயங்குதளமான 2.1 மற்றும் அதற்கு முந்தைய தளங்களுக்கு எந்த முன் அறிவிப்பு அறிவிக்கைகளும் வழங்கப்படாது, மேலும் பெரும்பாலான ஆப் உருவாக்குநர்கள் இந்த குறைந்த தளத்திற்கு ஆதரவான ஆப்களை வழங்குவதும் இல்லை,எனவே மிக குறைவான பயனாளர்கள் கொண்ட இந்த பிரிவுக்கு முற்றிலும் தனது ஆதரவை நீக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.

2.2 மற்றும் அதற்கு பிந்தைய எந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் கூகுள் ப்ளே சேவை பெறுவதில் எந்த பின்னடைவும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.