உலகின் முதன்மையான தேடுதல் எஞ்சின் என அழைக்கப்படுகின்ற கூகுளின் இன்றைய கூகுள் டூடுல் இவா எக்பால்ட் (Eva Ekeblad) எனும் ஸ்வீடன் நாட்டின் பெண் ஆராய்ச்சியாளரின் 293வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

இவா எக்பால்ட் – டூடுல்

ஸ்வீடன் நாட்டில் 1658 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட உருளைகிழங்குகள் தொடக்க காலங்களில் உயர்வகுப்பு பிரிவினரின் விலங்குகளுக்கு மட்டுமே உருளை கிழங்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஜூலை 10, 1724 ஆம் ஆண்டில் பிறந்த எக்பால்ட் எனும் தாவரவியல் ஆராய்ச்சி பெண்மனி உருளைகிழங்குகளை கொண்டு வைன், வோட்கா மற்றும் மாவு பொருட்களாக பயன்படுத்தலாம் என்பதனை கண்டுபிடித்தார்.

கூகுள் டூடுல்

16 வயதில் திருமணம் செய்து கொண்ட எவா அவர்களுக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என 7 பிள்ளைகளுக்கு தாயானர். தன்னுடைய 22 ஆம் வயதில் உருளை கிழங்கிலிருந்து மாவு , வைன் மற்றும் வோட்கா போன்றவற்றை தயாரிக்க முடியும் என தனது கனவர் மூலமாக அறிவித்தார். இவரின் கண்டுபிடிப்பின் பலனாக ஸ்வீடன் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் அன்று மட்டுமல்ல, இன்றைக்கும் முக்கிய பங்காற்றி வருகின்றது.

உலகின் மிகப்பெரிய கௌவரவ பதவிகளில் ஒன்றாக கருத்தப்படுகின்ற ராயல் ஸ்வீடிஷ் அகாடமி  ஆஃப் சயின்ஸ்’ அமைப்பால் தனது 24 வயதிலே எக்பால்ட் அங்கீகரிக்கப்பட்டார். இந்த அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்மனி என்ற பெருமைக்குரிய, இவருக்கு பிறகு அடுத்த 203 ஆண்டுகளுக்கு பிறகே 1951 ஆம் வருடத்தில் ஆஸ்திரியாவின் அணுசக்தி இயற்பியலாளர் லீஸ் மீட்னர் எனும் பெண்மனி அங்கீகரிக்கப்பட்டார்.

கூகுள் டூடுல் - Eva Ekeblad

உருளை கிழங்கு வாயிலாக தயாரிக்கப்படுகின்ற வைன் மற்றும் வோட்கா போன்றவை பார்லி, கோதுமை, மற்றும் கம்பு போனறவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதற்கு மாற்றாக அமைந்தது. இன்றைக்கும் ஸ்வீடன், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருளைகிழங்கில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் பிரசத்தி பெற்றதாக விளங்குகின்றது.

61 வயது வரை வாழ்ந்த எவா மே மாதம் 15, 1786 ஆம் ஆண்டில் மறைந்தார்.