பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் அதிர்ச்சி தகவல்உலகின் முன்னணி பேஸ்புக் சமூக வலைதளத்தில் 27 கோடி போலி கணக்குகள் இருக்கலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, போலி கணக்குகளை நீக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் போலி கணக்கு

பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் அதிர்ச்சி தகவல்

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் முன்னணி சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் இணையதளத்தில் 210 கோடிக்கு அதிகமான கணக்குகளை கொண்டுள்ளது. இவற்றில் போலி மற்றும் நகல் கணக்குகள் என மொத்தம் 27 கோடி கணக்குகள் இருக்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் பயனர்களின் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த கணக்குகளை நீக்குவதற்கு உண்டான நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தனது காலாண்டு வருவாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சில மணி நேரம் முடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here