தேர்தல் தலையீடுகளை தடுக்க "போர் அறை" உருவாக்கப்பட்டு வருகிறது: பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

தனது நிறுவனத்தின் சிலிகான் வாலி வளாகத்தில், புதிதாக “போர் அறை” ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில், சமூக இணைய தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் தலையீடுகளை தடுக்க முடிவு செய்துள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பேசிய பேஸ்புக் தேர்தல்கள் மற்றும் சிவிக் மேலாண்மை இயக்குனர் சமித் சக்ரவர்த்தி, தங்கள் நிறுவனம் மென்லோ பார்க்கில் “போர் அறை” ஒன்றை அமைத்து வருவதாகும், இதன் அறை உருவாக்கும் பணிகள், பிரேசில் மற்றும் அமெரிக்க தேர்தல்களை கருத்தில் கொண்டே அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இது கட்டளை மையமாக செயல்பட உள்ளது என்றும், இதன் மூலம் உடனுக்குடன் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

தேர்தல் தலையீடுகளை தடுக்க "போர் அறை" உருவாக்கப்பட்டு வருகிறது: பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், நாங்கள் போலியான கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கி வருகிறோம். இந்த பணிகள் பிரான்ஸ், ஜெர்மனி, அலபாமா, மெக்சிகோ மற்றும் பிரேசில் தேர்தல்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டு விடும்” என்றார்.

இந்த தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக இந்த தலையீடுகள் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி மெக்சிகோ மற்றும் பிரேசிலில் இயங்கி வரும் சில குழுக்கள் மூலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் பெரியளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால், தற்போது, இதுபோன்ற செயல்களை தடுக்க தயாராகி வருகிறோம் என்றார்.

தேர்தல் தலையீடுகளை தடுக்க "போர் அறை" உருவாக்கப்பட்டு வருகிறது: பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

போலி கணக்குகளை கண்டுபிடிப்பதுடன், யார் இந்த ஆன்லைன் விளம்பரங்களுக்கு பின்னால் உள்ளனர் என்பதையும் பேஸ்புக் கண்டுபிடித்து விடும். பின்னர் அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் புலனாய்வு சாப்ட்வேர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டில் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 1.3 பில்லியன் போலி கணக்குகளை நீக்கபட்டுள்ளன என்றும் இயக்குனர் சமித் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.