உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக பயனாளர்களை கண்கானிக்க வெப்கேமராவை பயன்படுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் ஸ்பை கேமரா

இன்றைய நவீன உலகை ஆளும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் பயனாளர்கள் விரும்புவதனை அறிந்து அதற்கு ஏற்ற செய்திகளை நியூஸ் ஃபீட் எனும் செய்தியோடை வாயிலாக வழங்கி வருகின்றது.

இதற்காக உங்களை விருப்பங்கள் மற்றும் கருத்துக்கள் உள்பட ஃபேஸ்புக்கில் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் செய்தியோடை விபரங்களை வழங்குகின்றது. சமீபத்தில் இன்டிபென்டென்ட் கோ.யுகே தளம் வெளியிட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்தில் ஃபேஸ்புக் கண்டறிந்துள்ள புதிய நுட்பம் ஒன்றுக்காக காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நுட்பமானது உங்களுக்கு தெரியாமலே உங்களை கண்காணிக்கும் வகையில் ரகசியமாக கேமராவை இயக்க திட்டமிட்டுள்ளதாம்.

எதற்காக ?

நீங்கள் உங்களுடைய நண்பர்களின் புகைப்படம் அல்லது செய்தியை காணும்பொழுது உங்களுடைய முகபாவனையை கண்கானித்து அதற்கு ஏற்ப செய்திகளை உங்கள் செய்தியோடையில் வழங்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது உங்கள் விருப்பமான நண்பர் புகைப்படத்தை பார்த்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அந்த முகபாவனையை கண்கானித்து அவருடைய பதிவுகளை உங்களுக்கு முதலில் தெரியும்படி ஃபேஸ்புக் செய்தியோடையில் வழங்கும் அல்லது விருப்பம் இல்லாத படங்களை கண்டால் அதனை வெறுப்பீர்கள், இதனையும் கண்கானித்து அவற்றை செய்தியோடையில் பின் தங்க வழிவகுக்கும்.

இது மட்டுமல்ல வீடியோ உள்பட அனைத்து செய்திகளும் உங்களை கேமராவாயிலாக கண்கானித்து அதற்கு ஏற்ப வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.