ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பதிவிடும் போலியான கணக்குகளை முடக்கும் வகையிலான செயல்பாடுகளை டெக் நிறுவனங்கள் தொடங்கியுள்ளது.

30,000 போலி கணக்குகளை நீக்கி ஃபேஸ்புக் அதிரடி

ஃபேஸ்புக் போலி கணக்குகள்

  • 1.89 பில்லியன் மாதந்திர பயனர்களை ஃபேஸ்புக் பெற்றுள்ளது.
  • 1 சதவித போல கணக்குகள் ஃபேஸ்புக்கில் இருக்கலாம் என நம்பப்டுகின்றது.
  • 30 ஆயிரம் போலி கணக்குகள் பிரான்ஸ் நாட்டில் நீக்கியுள்ளது.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிக எளிதாகவும் , விரைவாகவும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் களமாக உள்ள நிலையில் போலி கணக்குகளின் வாயிலாக தவறான செய்திகளை பகிருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகின்றது.

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை தீர்மானிப்பத்தில் போலி செய்திகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டிருந்தன.

2016 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் தாக்கல் செய்த அறிக்கையின்படி மாதந்தோறும் 1.89 பில்லியன் பயனர்கள் பயன்படுத்துவதனாகும். இதில் ஒரு சதவித கணக்குகள் போலி என ஃபேஸ்புக் உறுதியாக நம்புகின்றது.

போலி கணக்குளை கண்டறிவது , ஆபாசம் சார்ந்த படங்கள் மற்றும் போலி செய்திகளை நீக்குவதற்கு புதிய பாதுகாப்பு மற்றும் நம்பகதன்மை சார்ந்த நடவடிக்கைகளை ஃபேஸ்புக் மேற்கொண்டு வருவதனால், போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ பகிர்வுகளை வெளிப்படுத்திய 30,000 போலி கணக்குகளை பிரான்ஸ் நாட்டில் அதிரடியாக நீக்கியுள்ளது.

வரும் காலத்தில் சர்வதேச அளவில் போலி கணக்குகளை நீக்கும் நடவடிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here