சமூக வலைதளங்களில் மக்களின் பங்களிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருவதனை கருத்தில் கொண்டு பேஸ்புக் பல்வேறு வசதிகளை வழங்கி வரும் நிலையில் வீடியோ சேவைக்கென பிரத்தியேகமான பகுதியை அறிமுகம் செய்ய உள்ளது.

பேஸ்புக் வீடியோ

பேஸ்புக் நிறுவனம் பல்வேறு வசதிகளை தனது பயனாளர்களுக்கு வழங்கி வரும் சூழ்நிலையில் வீடியோ சார்ந்த சேவைகளுக்கு மக்கள் பெரும்பாலும் கூகுள் யூடியூப் தளத்தையே பயன்படுத்தி வருகின்ற நிலையில், யூடியூப் தளத்திற்கு சவாலாக லைவ்வீடியோ உள்பட பல்வேறு வசதிகளை வழங்கி வரும் நிலையில் இவற்றை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் டிஎன்டபிள்யு தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் பேஸ்புக் தங்களது அடுத்த ஆப் அப்டேட்டில் வீடியோ பகுதிக்கு என தனியான டேப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அதில் பிரிவுகள் வாரியாக தொகுத்து வழங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

நீங்கள் விரும்பி பக்கங்கள்,நண்பர்கள் மற்றும் நீங்கள் பின்பற்றும் நபர்கள் போன்றோரின் வீடியோவை செய்தி, பொழுதுபோக்கு, ஸ்போர்ட்ஸ், காமெடி மற்றும் லைஃப்டஸ்டைல் போன்ற பிரிவுகளில் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஃபேஸ்புக் தளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நேரலை தொலைக்காட்சி சேவைகள் உட்பட பலவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதால் பேஸ்புக் இணையதளம்  யூடியூப், நெட்ஃபிலிக்ஸ் போன்ற தளங்களுக்கு சவாலாக அமையலாம் என கருதப்படுகின்றது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்கள் பாதிகாப்பிற்கு ஃபேஸ்புக் புரஃபைல் பிக்சர் கார்ட் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக பேஸ்புக் படங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதனை தடுக்க இயலும் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.