3D துப்பாக்கி ப்ளுபிரிண்ட்டுகளை பகிர தடை விதிக்கிறது பேஸ்புக்

தங்கள் நிறுவன விதிகளை மீறுவதாக உள்ளதை தொடர்ந்து, 3D துப்பாக்கி ப்ளுபிரிண்டடுகளை சோஷியல் மீடியா நெட்வொர்கில் பகிர்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பேஸ்புக் நிறுவன செய்திதொடர்பாளர், துப்பாக்கி தயாரிப்பது குறித்த தகவல்கள், 3D பிரிண்டர்களின் மூலம் பெறப்பட்ட துப்பாக்கியின் படங்கள் அல்லது CNC மில்லிங் மிஷின் போன்றவற்றை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவல்களை, எங்களது கொள்கையின் படி அகற்றி விடுகிறோம். இதுமட்டுமின்றி இதுபோன்ற தகவல்களை அளிக்கும் இணைய தள முகவரிகளுக்கான லிங்க் பகிரப்பட்டாலும், நாங்கள் அகற்றிவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You