ஃபேஸ்புக் லிப்ரா மெய்நிகர் நாணயம், கலிப்ரா டிஜிட்டல் வாலெட் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள லிப்ரா (Facebook Libra Cryptocurrency) மெய்நிகர் நாணயத்தை ஃபேஸ்புக் நிறுவனத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்த இயலாது. இதனை லிப்ரோ கூட்டமைப்பு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. இதுதவிர, கலிப்ரா (Calibra digital wallet) என்ற பெயரில் டிஜிட்டல் வாலெட் ஒன்றையும் ஃபேஸ்புக் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது லிப்ரா கூட்டமைப்பில் 28 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர், அறிமுகத்திற்கு முன்பாக 100 உறுப்பினர்களாக உயர்த்துவற்கு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டமைபில் உள்ள முக்கிய நிறுவனங்களில் சில மாஸ்டர்கார்டு, விசா, உபெர், பேயு, பேபால், காயின்பேஸ் மற்றும் ஸ்பாடிஃபை. ஸ்ட்ரைப், ஈபே, லிஃப்ட், வோடபோன், பேஸ்புக் கலிப்ரா ஆகியவை அடங்கும். நாணயம் வெளியிடுவதற்கு முன்பாக அமெரிக்கா $10 மில்லியன் கூட்டாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளன.

லிப்ரா மெய்நிகர் நாணயம்

பிட்காயின் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும், அதே போன்ற முறையில் செயல்பட உள்ளது. ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இலாப நோக்கமற்றதாக செயல்பட உள்ள லிப்ரா டிஜிட்டல் நாணயமாக இருக்கும், இது வங்கி வைப்புத்தொகை மற்றும் குறுகிய கால அரசாங்க பத்திரங்கள் உள்ளிட்ட நிஜ உலக சொத்துக்களின் இருப்புடன் ஆதரிக்கப்படுகிறது, மேலும் அவை பாதுகாவலர்களின் வலைப்பின்னலால் வைத்திருக்கும். இந்த கட்டமைப்பானது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் விலையை உறுதிப்படுத்துவதற்கும் நோக்கமாக உள்ளது.

லிப்ராவின் துல்லியமான பரிவர்த்தனைகள் ஒரு பிளாக்செயின் மூலம் இயக்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும், இது கணினிகளின் நெட்வொர்க் மூலம் பரிவர்த்தனைகள் பராமரிக்கப்பட உள்ளது.

Facebook Calibra

ஃபேஸ்புக் கலிப்ரா

ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ள டிஜிட்டல் முறையிலான வாலெட் ஆகும். இந்த வாலெட்டிற்கு ஃபேஸ்புக் டேட்டா எக்காரணம் கொண்டு பயன்படுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஃபேஸ்புக் கலிப்ரா சேவையை பெற தனிநபர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது அரசு அனுமதித்த ஆதாரங்களை கொண்டு மட்டும் பயன்படுத்த இயலும். குறிப்பாக இந்த டிஜிட்டல் வாலெட் ஃபேஸ்புக் மெசஞ்ர், வாட்ஸ்அப் போன்றவற்றில் இயங்கும் வகையிலும், பிரத்தியேகமான ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்களும் வழங்கப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டின் மத்தியில் ஃபேஸ்புக் கலிப்ரா மற்றும் லிப்ரா மெய்நிகர் நாணயம் நடைமுறைக்கு கிடைக்க உள்ளது.