சமூக வலைதளங்களில் முன்னணியாக உள்ள பேஸ்புக் இந்தியாவில் முதற்கட்டமாக ப்ரஃபைல் படங்களை அதாவது அடையாள படம் உங்களுடைய டிபியை பாதுகாக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..!

பேஸ்புக் டிபி பாதுகாப்பு எப்படி ?

சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற படங்களில் குறிப்பாக ப்ரஃபைல் படங்களாக வைக்கப்படுகின்ற நம்முடைய படங்களை பாதுகாக்க அற்புதமான வசதியை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது.

வழிமுறை என்ன ?

உங்களுடைய பேஸ்புக் மொபைல் ஆப்பை புதிய வெர்ஷனுக்கு முதலில் மேம்படுத்துங்கள் , பின்னர் பேஸ்புக்கை திறந்த உடன் Help protect your profile picture என்ற ஆப்ஷன் உங்களுக்கு தோன்றும்.

பேஸ்புக் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..!

அப்படி தோன்றும் பட்சத்தில் அதனை க்ளிக் செய்தால் கார்டு என க்ளிக்செய்த உடன் உங்கள் டிபி படங்கள் யாரும் டவுன்லோட் செய்யாமல் போகும் வாய்ப்பு உருவாகும்.

படங்களை புதிதாக மாற்றும்போது கீழே வழங்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போன்று மாற்றம் செய்து உங்களது புகைப்படத்தை பாதுகாக்கலாம்.

பேஸ்புக் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..!

 

முதற்கட்டமாக இந்த வசதி புரஃபைல் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பதிவேற்றும் மற்ற படங்களுக்கு இந்த வசதி வழங்கப்படவில்லை. கார்டு என பாதுகாக்கப்பட்ட படங்களை நீக்கவும் வழிவகை செய்கின்றது. மேலும் ப்ரஃபைல் படங்களை ஸ்கீரின்ஷாட்செய்வதற்கும் எச்சரிக்கை வழங்குகின்றது.

இதனால் தனிநபர் படங்களை மற்றவர்கள் கையாளுவதை தடுக்க இயலும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com