உலகின் முதன்மையான சமூக வலைதளமாக விளங்குகின்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் சார்பில் டீன்ஏஜ் பருவத்தினருக்காக பிரத்தியேக மெசேஜ் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாம்.

ஃபேஸ்புக்கின் அடுத்த அதிரடி டீன்ஏஜ் ஆப் விரைவில்..!

ஃபேஸ்புக் டாக்

இந்த செயலி இளம்பருவத்தினர் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம், ஆனால் இந்த செயலின் முக்கிய விபரங்களை பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையில் உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பெற்றோர்கள் கண்கானிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த ஆப் பெயர் டாக் (Talk) என இருக்கலாம் என தி இன்ஃபார்மெஷன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த செயலிக்கு ஃபேஸ்புக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கின்றது.

குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடு உள்பட பின்தொடருபவர்கள் மற்றும் பார்வையிடுகின்ற மற்றும் தேடுகின்ற செய்திகள் என அனைத்தையும் பெற்றோர்களால் முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுவதாக செல்லப்படுகின்றது.

ஃபேஸ்புக்கின் அடுத்த அதிரடி டீன்ஏஜ் ஆப் விரைவில்..!

குழந்தைகள் தங்களுடைய மெசேஞ்களை ஃபேஸ்புக் டாக் செயலியில் பகிர்ந்தால் பெற்றோர்கள் அதனை மெசேஞ்ஜர் வாயிலாக படிக்கும் வகையில் இந்த செயலியின் நோக்கம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய செயலி குறித்தான கேள்விக்கு ஃபேஸ்புக் நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here