ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது #FacebookDown

பிரபலமான சமூக ஊடக வலைதளங்களான வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பல்வேறு நாடுகளில் பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் டவுன்டிடெக்டர் வெளியிட்டுள்ள குறிப்பில் உறுதியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா,  மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.

ஃபேஸ்புக் முடங்கியது

உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக கணினி வழியாக இந்த பாதிப்பு காணப்படுகிறது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தற்போது #FacebookDown , #whatsappdown மற்றும் #instagramdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருகிறுது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

அதிகார்வப்பூர்வமாக ஃபேஸ்புக் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்து கடந்த 12 மணி நேரமாக நாங்கள் எங்களது சர்வர் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் , இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் மூன்று முறை பெரிய அளவிலான சேவை முடக்கத்தை சந்தித்துள்ளது. தொடர்ந்து இந்நிறுவனம் போலிச் செய்திகள், தவறான கருத்துகள் மற்றும் தனிநபர் விபரங்களை பாதுகாக்க போராடி வருகின்றது.