இ-காமர்ஸ் சைட்களில் போலி அழகு சாதனங்கள் விற்பனைக்கு தடை

இ-காமர்ஸ் இணையத்தளங்களான பிளிக்கார்ட் மற்றும் அமேசான் இணையத்தளங்கள், தங்கள் இணைய தளத்தில், போலியான அழகு சாதன பொருட்களை விர்ப்னியா தடை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டுத் ஆணையம் (DCGI) இ-காமர்ஸ் இணையதளங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இதுபோன்ற போலி பொருட்களை விற்பனை செய்ய கூடாது என்று எச்சரிக்கை விடுத்தது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இ-காமர்ஸ் சைட்களில் போலி அழகு சாதனங்கள் விற்பனைக்கு தடை

இதுகுறித்து வெளியான செய்தியில், ஸ்டெம்-செல் அடிப்படையிலான அழகு சாதன பொருட்கள், முகத்தை வெள்ளையாகும் கிரீம்கள், குளுதாதயோன் இன்ஜின்கள் மற்றும் ஹைலூரோனோனிக் அமிலம் நிரப்பு ஊசி ஆகியவற்றை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே இவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பேசிய DCGI உயர்அதிகாரி ஈஸ்வர ரெட்டி, இதுபோன்ற போலி பொருட்களை டெலிட் செய்யும் பணிகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்வதுடன், போலி பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

இ-காமர்ஸ் சைட்களில் போலி அழகு சாதனங்கள் விற்பனைக்கு தடை

இதுகுறித்து பேசிய அமேசான் இந்தியா செய்திதொடபாளர், அமேசான் டாட் இன் இணையதளம் இதுபோன்ற போலி பொருட்களை தடி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் எந்த ஒரு பொருள் குறித்து புகார் தெரிவித்தாலும், அதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே தங்கள் இணைய தளத்தில் போலி பொருட்கள் விற்பனை தடுக்கப்படும் என்றார்.