கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி முகப்பில் லோகோவிற்கு பதிலா டூடுலை முக்கிய நாட்களில் கொண்டு வருவதனை வழக்கமா கொண்டிருப்பதனை அனைவருமே அறிவோம். இன்றைக்கு பிரபலமான Google Doodle கேம்கள் என தனது பழைய விளையாட்டுகளை வரிசைப்படுத்த துவங்கியுள்ளது.
27.04.2020
இன்றைக்கு கோடிங் கேமினை வழங்கி அதனை விளையாடும் வகையில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டுகளை டூடுல் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் 50 வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்ட குழந்தைகளின் கோடிங் விளையாட்டினபை இன்றைக்கு வழங்கியுள்ளது. அடுத்தப்படியாக மற்ற நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு பழைய டூடுல் கேம்களை வழங்க உள்ளது.
இன்றைய டூடுல் கேமில் உள்ள கேரட்டை சேகரிப்பதனை நோக்கமாக உள்ளது. படத்தில் கீழுள்ள உள்ள அம்பினை எடுத்து மேலே உள்ள கோடிங் பகுதியில் சேர்த்தப் பின்னர் நகர்த்தினால் தானாக கேரட்டைச் சேகரித்துக் கொள்ளலாம்.
28.04.2020
2017 ஆம் ஆண்டு கிரிக்கெட்டினை முன்னிட்டு வெளியிடப்பட்ட கிரிக்கெட் டூடுலை தற்போது வீட்டிலிருந்தபடி விளையாடுங்கள் என கூகுள் தனது முகப்பில் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் இணையத்தில் பெரும்பகுதி நேரத்தினை செலவழித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு பிரபலமான Google டூடுல்களை வீட்டிலிருந்தபடி விளையாடுங்கள் என குறிப்பிட்டுள்ளது.
https://www.google.com/logos/2017/cricket17/cricket17.html?hl=ta