பப்ஜிக்கு மாற்றாக FAU-G கேமிற்கு ப்ரீ புக்கிங் துவங்கியது

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட nCORE நிறுவனத்தின் போர் வீடியோ விளையாட்டான FAU-G (Fearless and United Guards) வீடியோ கேம் விளையாடுவதற்கான ஆரம்ப நிலை பதிவு முதற்கட்டமாக கூகுள் பிளே ஸ்டோர் மூலம் துவங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் பப்ஜி, டிக்டாக் உட்பட பல்வேறு ஆப்களை சீன நாட்டினை தலைமையிடமாக கொண்டவற்றை பாதுகாப்பு நோக்கத்திற்காக தடை செய்துள்ளது. இந்நிலையில் இந்த பிரசத்தி பெற்ற செயலிகளுக்கு மாற்றாக பல்வேறு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

Fearless and United Guards என அழைக்கப்படுகின்ற வீடியோ கேம் இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியை  மையமாக கொண்ட கிராபிக்ஸ் மற்றும் விளையாட்டு அமைப்பினை உருவாக்கியுள்ளது.  குறிப்பாக இந்த விளையாட்டு இந்திய எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Web title : FAU-G game pre-registration begins on Google Play Store