AI மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் ஜோஹன் செபாஸ்டியன் பாக் #GoogleDoodle

பிரசத்தி பெற்ற ஹார்மனிய இசை கலைஞரும், இசையமைப்பாளருமான ஜோஹன் செபாஸ்டியன் பாக் அவர்களின் 334வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மூலம் இயங்கும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ள முதல் டூடுல் என்ற பெருமையை யோகான் செபாஸ்தியன் பாக் அவர்களின் இசையைக் கொண்டாடுவோம் என்ற நோக்கில் வெளியிட்டு கூகுள் அசத்தியுள்ளது.

யோகான் செபாஸ்தியன் பாக்

ஜெர்மனி நாட்டில் இசைகுடும்பத்தின் வாரிசாக பிறந்த யோகான் செபாஸ்தியன் பாக் , இசையமைப்பது, ஹார்மனி இசையமைப்பத்தில் மிகவும் வல்லவராக விளங்கினார். இவரின் 334வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டூடுல் மெஷின் லேர்னிங் முறையை பயன்படுத்தி சுவாரஸ்யமான இசை கோர்வையாக மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

AI மூலம் இயங்கும் முதல் கூகுள் டூடுல் ஜோஹன் செபாஸ்டியன் பாக் #GoogleDoodle

கூகுள் நிறுவனத்தின் அங்கமான மேக்னெட் மற்றும் பேர் என இரு நிறுவனங்களின் மெஷின் லேர்னிங் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 306 பாக் இசையமைப்பபின் பின்னணி கோர்வையை தானாக ஆய்வு செய்து அதற்கு இணையான இசை கோர்வையை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைய தேடுதலின் முதன்மையான சர்ச் என்ஜின் கூகுள் , ஆண்டு தோறும் 2000க்கு மேற்பட்ட சித்திரங்களை கூகுள் டூடுல் என்ற பெயரில் தனது லோகோவுக்கு மாற்றாக வெளியிட்டு வருகின்றது. கூகுள் வரலாற்றில் முதன்முறையாக மெஷின் லேர்னிங் அமைப்பில் வெளியிட்டுள்ளது.

இது எவ்வாறு இயங்குகின்றது என்பதனை அறிய கூகுள் முகப்பு பக்கத்தில் சென்று நீங்களும் இசையமைத்து மகிழுங்கள்.