ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய சவாலாக விளங்கும் பேட்டரி பிரச்சனைக்கு தீர்வு உருவாக்கும் வகையில் பேட்டரி இல்லாத உலகின் முதல் போனை அமெரிக்க ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

பேட்டரி இல்லாத ஸ்மார்ட்போன் சாதித்த ஆய்வாளர்கள்..! - வீடியோ இணைப்பு

பேட்டரி இல்லாத மொபைல்

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செல்போன்களில் மிகப்பெரிய சவாலாக விளங்கும் பேட்டரி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வினை வழங்கும் வகையில் மேற்கொண்ட ஆய்வில் பேட்டரி இல்லாத வகையிலான மொபைலை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.மேலும் இது டம்மி இல்லை என நிரூபிக்கும் வகையில் ஸ்கைப் செயலி வழியாக வீடியோ அழைப்பை மேற்கொண்டும் அசத்தியுள்ளனர்.

பேட்டரி இல்லாத ஸ்மார்ட்போன் சாதித்த ஆய்வாளர்கள்..! - வீடியோ இணைப்பு

எவ்வாறு இயங்குகின்றது ?

இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேடியோ அலைகளை வெளியிடும் கோபுரங்களை அமைத்து அதிலிருந்து வெளியேறுகின்ற ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையில் செயல்விளக்கத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

இதில் வெறும் அழைப்புகள் மட்டுமல்லாமல் இணையதள சேவை மற்றும் பேட்டரி உள்ள செல்போன்களின் அனைத்து பயன்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் வடிவதைத்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் பேட்டரி இல்லாத செல்போன் பயன்பாட்டிற்கு வணிகரீதியாக வரும்போது வைஃபை டவர்கள் மற்றும் செல்போன் அலைவரிசை வாயிலாக ரேடியோ அலைகளை பெற்று இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி சார்ஜ் இல்லை என்ற வார்த்தையும் செல்போனில் மறையும்..!

வீடியோ இணைப்பு