தமிழில் ஃபேஸ்புக் டிவி ஒளிபரப்படுமா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஃபேஸ்புக் டிவி தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கியிருந்த நிலையில் ஆகஸ்ட் மாத மத்தியில் ஃபேஸ்புக் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட உள்ளது.

ஃபேஸ்புக் டிவி

சர்வதேச அளவில் முதற்கட்டமாக ஹாலிவுட் சினிமா அரங்கில் உள்ள தொழிற்நுட்ப வல்லுஞர்களை கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் இந்நிறுவனம் , இளைஞர்கள் முதல் பெரியவர்கள் விரும்பும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறும்படத்தை போன்றே மிக சிறப்பான கருத்துக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் ஃபேஸ்புக் சர்வதேச அளவில் ஆங்கிலத்தில் முதற்கட்டமாக அறிமுகம் செய்தாலும், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் மீது ஃபேஸ்புக் தனி கவனம் கொண்டு செயல்படும்  என்பதனால் மொழி வாரியாக டிவி நிகழ்ச்சிகளை மாற்றி வழங்கவும் அல்லது புதிதாக தயாரிக்கவும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் உண்டு என்பதனால் நமது நாட்டின் பிராந்திய மொழிகள் உள்பட தமிழ் மொழியிலும் கிடைக்க பெறலாம்.

காட்சி ஊடகத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அடைந்து வரும் சூழ்நிலையில் ஃபேஸ்புக் டிவி மிக எளிமையாக 200 கோடிக்கு மேற்பட்ட மக்களை சென்றடையும் என்பதனால், இதன் மூலம் விளம்பரம் வாயிலாக வருவாயை பெற திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் Source3 என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வீடியோ திருட்டை தடுக்கும் வகையிலான ஐபி முகவரி கொண்டு அதன் பூர்வீக ஆதாரத்தை அறியும் வகையிலான மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ள  Source3 நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

கூகிள் நிறுவனம் தனது மொபைல் ஆப்பில் உள்ள தேடுதல் பகுதியின் கீழே சோதனை ஓட்ட முறையில் யூடியூப் வீடியோக்களை தானாகவே ப்ளே செய்யும் வகையில் செயல்படுத்தும் நோக்கில் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடதக்கதாகும்.

Recommended For You