இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் பிளிப்கார்ட் நிறுவனம் எதிர்வரும் “பிக் பில்லியன் டேஸ்” சேல்-க்கான தேதியை அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது.

இந்த சேல் வரும் அக்டோபர் 10 தேதி தொடங்கி வரும் அக்டோபர் 14ம் தேதி வரை பெற உள்ளது. 5-வது எடிசன் “பிக் பில்லியன் டேஸ்” சேல்- நடைபெறும் நாட்களில் ஸ்மார்ட் போன்கள், டிவிக்கள், பெரியல்வினால அப்ளையன்ஸ் மற்றும் பலவற்றுக்கு சலுகை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமின்றி ரீடெய்லர்கள் மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து பல பேமென்ட் வசதிகளையும் அளிக்க உள்ளனர்.

இந்த சேல்-லின் ஹைலைட்டே, பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்கள் எளிதாக “பிக் பில்லியன் டேஸ்” சேல்-யை செய்து கொள்ள முடியும். இந்த சேல் தொடங்க இருக்கும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே மெம்பர்கள் சலுகைகளை தெரிந்து கொள்ள முடியும்.

அமேசான், நிறுவனமும், தனது சேல் கவுண்டரை இந்த நாட்களில் திறக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் இந்த சேல் எப்போது தொடங்கும் என்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.