மீண்டும் வந்துவிட்டது , 2017 ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சிறப்பு சலுகை செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி ஆகிய 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே

மாபெரும் சலுகைகளை வழங்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற விற்பனை திருவிழா நாளாக கருதப்படும் பிக் பில்லியன் டே சேல் என்ற பெயரில் சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது 10 ஆண்டுகளை நிறைவடைந்தை கொண்டாடும் வகையில் 90 சதவிதம் சலுகைகளை வழங்குவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விற்பனை திருவிழாவில் ஸ்மார்ட்போன்கள், பேஷன் ஆடைகள், மின் மற்றும் வீட்டு உபகரணங்கள் மற்றும் ஆபரணங்கள் என பல்வேறு பொருட்கள் மாபெரும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனையில் நோ காஸ்ட் இஎம்ஐ, ப்ராடெக்ட் எக்ஸ்சேஞ், பை பேக் கியாரன்டி மற்றும் பை நவ் பே  லேட்டர் ஆகிய சிறப்பு வசதிகளை எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை பயனாளர்களுக்கு வழங்குகின்றது.

5 நாட்களுக்கு நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் உங்கள் விருப்பமான ஸ்மார்ட்போன்கள் முதல் அனைத்து உபகரணங்களையும் வாங்க தயாராக இருங்கள். ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே தேதி செப்டம்பர் 20 முதல் செப்ட்ம்பர் 24 வரை நடைபெற உள்ளது.