இந்தியாவில் பிப்ரவரி 19 துவங்கி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை ‘மொபைல் போனான்சா’ என்ற பெயரில் பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு விலைக் குறைப்பினை மேற்கொண்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில் பிரசத்தி பெற்ற மொபைல் நிறுனங்களான சியோமி, ரெட்மி, ஏஸுஸ், ரியல்மி, சென்போன் மற்றும் சாம்சங் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் Mobiles Bonanza Sale தள்ளுபடி நிலவரம்

பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையில் குறிப்பாக ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும் சில முக்கிய தள்ளுபடி விபரங்கள் பின் வருமாறு ;-

ரியல்மி 2 ப்ரோ மொபைல் போனின் 4ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலுக்கு ரூ.11,990 எனவும், மற்றொரு 6ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் விலை ரூபாய் 14,990க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைக்கப்பட்டு  மற்றும் 12,999 என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் கொண்ட மாடல் விலைகுறைக்கப்பட்ட ரூ.6,999 எனவும்,
3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி சி1  விலை குறைக்கப்பட்ட ரூ.7,499 என கிடைக்கின்றது.

ரியல்மி 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.9,990 என  விலைகுறைக்கப்பட்டுள்ளது. ஏசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 இந்த சேலில் ரூபாய் 8,499 விலையில் கிடைக்கின்றது.

மேலும், இந்த விற்பனையில் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.17,999 விலையில் கிடைக்கின்றது. இதுதவிர விவோ வி9 ப்ரோ, மோட்ரோலா ஓன் பவர், ரெட்மி Y2, ரியல்மி 2 என பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.