flipkart-republic-day-sale-to-begin-from-january-20

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் அறிவித்திருந்த விற்பனைக்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை’ என தள்ளுபடி விற்பனையை வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நடத்த உள்ளது.

குடியரசு தின விழா சேல்

அமேசான் நிறுவனம் சார்பாக ‘தி கிரேட் இந்தியன் சேல்’ என்ற பெயரில் ஜனவரி 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி, குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள குடியரசு தின விழா விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பு சலுகைகளும், டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ் வகைகளுக்கு 75 சதவீதம் வரையிலான தள்ளுபடியும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80 சதவீதம் வரையிலான தள்ளுபடியும் தரவுள்ளதாக தனது டசரில் குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் சலுகையாக எஸ்பிஐ கிரெடிட் அட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் 10 சதவீத தள்ளுபடி வழங்க உள்ளது.  இதைத் தவிர ’ரஷ் ஹவர் சேல்’ என்ற சர்ப்ரைஸ் தள்ளுபடி அறிவிப்புகள் மூலம் 26 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.

ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ந் தேதி முதல் ஜனவரி 22ந் தேதி வரை நடக்க உள்ளது.

அமேசான் ‘தி கிரேட் இந்தியன் சேல்’ விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.