நவீன உலகின் மிக முக்கியமான இணையங்களில் பாதுகாப்பு தொடர்பாக 165 நாடுகளின் ஆய்வறிக்கையில் இந்தியா 23வது இடத்திலும், சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது.

இணையப் பாதுகாப்பு

சர்வேச்ச அளவில் இணையங்களில் நடைபெறுகின்ற குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் உலகளாவிய சைபர் செக்யூரிட்டி இன்டெக்ஸ் என்ற பெயிரில் ஐநா-வின் தொலைத்தொடர்பு முகமையின், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அமைப்பு வெளியிட்டுள்ள 165 நாடுகள் கொண்ட இணையத்தில் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் இந்தியாவிற்கு 23வது இடம் கிடைத்துள்ளது.

முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள் பட்டியல் விபரம் வருமாறு, 

சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்தோனியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வரிசையில், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா 11-ம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 0.925 புள்ளிகள் பெற்று உலகில் இணையப் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக சிங்கப்பூர் விளங்குகின்றது. இந்த பட்டியலில் 0.683 புள்ளிகள் பெற்று இந்தியா 23வது இடத்தில் உள்ளது.