முதன்முறையாக ஜூன் 15, 1987 அன்று அதிகார்வப்பூர்வமாக வெளியிடபட்ட GIF (ஜிஃப்) படங்கள் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.

30வது பிறந்த நாளை கொண்டாடும் GIF படங்கள்..!

ஜிஃப் படங்கள் வரலாறு

1987 அன்று இதே நாளில் ஸ்டீவ் வில்ஹைட் என்பவர் முதன்முறையாக இன்றைய GIF படங்களை உருவாக்கினார். GIF என்றால் Graphics Interchange Format என்பது விளக்கமாகும். கம்ப்செர்வ் என்ற அமெரிக்கா நிறுவனத்தில் பணியாற்றி ஸ்டீவ் மென்பொருள் உருவாக்குநர் ஆவார்.

 

1995 ஆம் ஆண்டு முதல் பிபரலமாக தொடங்கிய ஜிஃப் படங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவுக்கு பின்னர் அதன் மீதான ஈர்ப்பு மேலும் அதிகரிக்கவே இன்று அனைத்து இடங்களில் ஜிஃப் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஜிஃப் என்பதனை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் நடைபெற்று விவாதத்தின் இறுதியாக jif என அழைப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.

இதனை கொண்டாடும் வகையிலே இன்று ஃபேஸ்புக் தளத்தில் கருத்துரைகளிலும் ஜிஃப் படங்களை இடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

30வது பிறந்த நாளை கொண்டாடும் GIF படங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here