உலகின் முன்னணி மின்னஞ்சல் சேவைகளில் ஒன்றான கூகுள் ஜிமெயில் சேவையில் இனி .js பைல்களை அதாவது ஜாவாஸ்கிரிப்ட் அனுப்பவதற்கு தடை விதிக்க உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் வழியாக ஏற்படும் மால்வேர் தாக்குதல்கள் குறையும் என ஜிமெயில் தெரிவிக்கின்றது.

கூகுள் ஜிமெயில்

கூகுள் ஜிமெயில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘ வருகின்ற பிப்ரவரி 13ந் தேதி முதல் ஜிமெயில் வாயிலாக எந்தவொரு .js  பைல்களும் அனுப்ப இயலாது. மேலும் ஆர்சீவ் முறையில் .zip, .tgz, .gz, மற்றும் .bz2 போன்ற முறையிலும் .js பைல்களை அனுப்பவது தடை செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்பாக ஜிமெயிலின்  சேவையில் .exe, .bat, மற்றும் .msc போன்ற பைல்கள் அனுப்புவது தடையில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.

ஜாவாஸ்கிரிப்ட் அனுப்ப வழி என்ன ?

ஜாவாஸ்கிரிப்ட் அனுப்பவதற்கு கூகுள் டிரைவ் வழியாக உங்கள் .js  ஃபைலை இனைத்து அந்த இணைப்பினை மின்னஞ்சல் வாயிலாக இனி அனுப்பலாம்.

ஜிமெயிலில் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட பல வசதிகளை கூகுள் வழங்கி வருகின்றது. சமீபத்தில் ஜிமெயில் பிஷ்ஷிங் அட்டாக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக உங்கள் தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்புள்ளது.