இணையதள ஜாம்பவான் வழங்குகின்ற கூகுள் வரைபடத்தை முழுமையாக நம்ப வேண்டாம் என பேனர் மூலம் கோவாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்தான விபரத்தை இனி தொடர்ந்து காணலாம்.

கோவா போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் குவிகின்ற பகுதிகளில், இன்றைய தலைமுறையினர் தங்கள் உதவிக்கு கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் கூகுள் மிகச்சரியாக வழி காட்டி வருகின்ற நிலையில், ஒரு சில நேரங்களில் தவறான பாதையை காட்டுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த வகையில் கோவாவில் உள்ள பாகா பீச் தொடர்பான வழிதடத்தை தவறாக காட்டுவதாக பேனர் மூலம் எச்சரித்துள்ளனர். அதாவது ‘You are fooled by Google Maps. This road doesn’t take you to Baga Beach!!! Turn back and take a left turn, Baga is 1 km from here’ இவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கூகுள் வரைபடம் உங்களை முட்டாளாக்கி உள்ளது. இந்த சாலை உங்களை பாகா கடற்கரைக்கு கொண்டு செல்லாது, எனவே, இடப்பக்கம் திரும்பி 1 கிலோ மீட்டர் சென்றால், பாகா கடற்கரை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

சில நேரங்களில் கூகுள் மேப் தவறான வழி தடங்களை காட்டுவதனை வழக்கமாக கொண்டு உள்ளது. இதனை பெரும்பாலும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் தவறுகளை கண்டறிந்நு நீக்கி வருகின்றது.