கோ எனப்படும் சீனாவின் மிகவும் பழமையான மற்றும் கடினமான விளையாட்டில் பிரபலமான கீ ஜேய் என்பவரை செயற்கை அறிவுத்திறன் பெற்ற கூகுள் ஆல்ஃபாகோ இரண்டாவது முறையாக தோற்கடித்துள்ளது.

ஆல்ஃபோகோ எந்திரன்

மே 23 முதல் மே 27 வரை  Future of Go Summit என்ற பெயரில் சீனாவில் நடைபெற்று வரும் கூகுள் டீப்மைன்ட் ஆல்ஃபாகோ போட்டியின் முதல் நாளில் ஆல்பாகோ வென்றதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த போட்டியிலும் கீ ஜேயை வீழ்த்தியுள்ளது.

2000 ஆண்டுகள் பழமையான சீனாவின் மிகவும் பாரம்பரியமான மற்றும் கடினமான விளையாட்டு என அறியப்பட்ட கோ விளையாட்டில் கடந்த 23ந் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் சீனாவின் பிரசத்தி பெற்ற மற்றும் உலகின் நெ.1 சாம்பியன் Ke jei என்பவரை எதிர்த்து கூகுள் நிறுவனத்தின் செயற்கை அறிவுத்திறன் பெற்ற ரோபோ ஆல்ஃபாகோ மோதியதில் 3-3 என இருவரும் சமநிலை பெற்றிருந்த நிலையில் ஆட்டநேர முடிவின்படி அரை புள்ளி கூடுதலாக பெற்றதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற இரண்டாவது நாள் போட்டியில் முதல் 100 மூவ்களில் இருவரும் சமமாகவே பயணித்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஆல்ஃபாகோ கூடுதல் புள்ளிகளை பெற்ற வெற்றி பெற்றது.இன்றைய போட்டியின் முடிவு விபரம் படம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வருகின்ற 27ந் தேதி சனிக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகளை ஆல்ஃபாகோ வென்றுள்ளது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

இந்த படம் முதல் நாள் முடிவாகும்.