செயற்கை நுண்ணறிவு கொண்ட கூகுள் ஆல்ஃபாகோ மீண்டும் மனிதனை தோறகடித்து தன்னுடைய திறனை நிரூபித்து காட்டியுள்ளது. கடந்த வருடம் லீ செடாலை வென்றதை தொடர்ந்து இந்த வரும் கீ ஜேய் என்பவரை முதல் போட்டியில் வீழ்த்தியுள்ளது.

கூகுள் ஆல்ஃபாகோ

மே 23 முதல் மே 27 வரை  Future of Go Summit என்ற பெயரில் சீனாவில் நடைபெற்று வரும் கூகுள் டீப்மைன்ட் ஆல்ஃபாகோ போட்டியின் முதல் நாளில் ஆல்பாகோ வென்றுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணுறிவு கொண்ட இந்த ஆல்ஃபாகோ (AlphaGo) மனிதனுடன் மோதி மீண்டும் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்பொழுதைய கோ சாம்பியன் பட்டம் வென்றுள்ள கீ ஜேய் (Ke jie) எனும் 19 வயது சீனாவைச் சேர்ந்த இவர் சீனாவின் மிகவும் பழமையான கோ விளையாட்டில் மிகவும் திறன் பெற்ற மனிதராக உலக அளவில் அறியப்பட்டவராகும்.

கடந்த வருடம் தென்கொரியாவின் பிரசத்தி பெற்ற லீ செடால் என்பவரை ஆல்ஃபாகோ 4-3 என்ற புள்ளி கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்தாண்டில் தொடங்கியுள்ள முதல் போட்டியில் 3 -3 என்ற சமநிலையை எட்டினாலும் ஆட்டநேர முடிவில் அரை புள்ளிகள் கூடுதலாக பெற்று ஆல்பாகோ வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3000 ஆண்டுகள் பழமையான கோ விளையாட்டு உலகின் மிக கடுமையான சவால்கள் நிறைந்த போட்டியாக கருதப்படுகின்றது. மிகவும் சவலான இந்த விளையாட்டை செயற்கை அறிவுத்திறன் பெற்ற ஆல்ஃபாகோ மிக லாவாகமாக கையாளுவதாக கூகுள் குறிப்பிடுகின்றது.

வரும்காலத்தில் பிரசத்தி பெற்ற ஹாலிவுட் திரைபடமான வில் ஸ்மித் ஐ ரோபட் போல நம்ம சங்கரின் எந்திரன் போல உலகை ரோபோக்கள் ஆளப்போகின்றது.