இந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்இந்தியாவில் கூகுள் ஆப் வாயிலாக நியூஸ் ஃபிட் வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் கிடைக்க உள்ளது.

கூகுள் ஃபீட்

அமெரிக்காவில் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் ஃபிட் எனப்படும் இந்த வசதி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் விரும்பும் வலைத்தளங்கள், விளையாட்டு, பிரபலங்கள், விருப்பமான எபிசோடு உள்ளிட்ட அனைத்தையும் ஃபீட் வழியாக பின்பற்ற இயலும், அதனால் உங்கள் முக்கிய செய்திகளை விரைவாக படிக்கலாம். இது உங்கள் தேடல் பழக்கத்தின் அடிப்படையில் வகுத்து வழங்கப்பட உள்ளது.

உங்கள் விருப்பம் மொபைல் அல்லது டெலிகாம் பற்றி என்றால் இணையத்தில் தரவேற்றப்படும் மொபைல் தொடர்பான செய்திகள் மற்றும் டெலிகாம் தொடர்பான தகவல்களை விரைந்து பெறலாம். இது உங்கள் கூகுள் ஆப் அல்லது தேடல் முகப்பின் கீழே கிடைக்க பெறும். இதில் யூடியூப் காணொலிகளை பெறலாம்.

இந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்

இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பெறலாம். தற்போது ஆங்கிலம் , ஹிந்தி மொழிக்கு ஃபீட் கிடைக்க தொடங்கி உள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும் விரைவில் விரிவுப்படுத்தப்படலாம்.

இந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்

இந்தியாவில் கூகுள் ஃபீட் சேவை அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here