தமிழில் கூகுள் அசிஸ்டென்ட் சேவை அறிமுகமானது

Google Assistant: இந்தியர்களின் காதலுக்கு இலக்கான கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant) சேவை, இப்போது தமிழ் மொழி உட்பட கூடுதலாக பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேப், வாய்ஸ் டைப்பிங் ஆதரவு கெய்ஓஎஸ், மெசஜேஸ் உடன் இணைப்பு என பல்வேறு வசதிகளுடன் மேம்பாடு கண்டுள்ளது.

தமிழ் உட்பட மராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம் மற்றும் உருது மொழிகளில் வந்துள்ள கூகிள் அசிஸ்டென்ட் சேவை, அடுத்ததாக இரு மொழி ஆதரவை ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலியன், மற்றும் ஜப்பான் பெற்றிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஹிந்தி, கொரியன், நோர்வே, டேனிஷ், ஸ்வீடீஷ், மற்றும் டச்சு என மொழிகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டென்ட்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் மட்டும் கூகுள் மேப் இணைப்பு அசிஸ்டன்ட் செயலியுடன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதல் ஆதரவாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் அசிஸ்டன்ட் மூலம் இனி ஒட்டுநர்கள் உட்பட அனைவருக்கும் சிறந்த முறையில் கிடைக்க உள்ளது. இணைப்பின் காரணமாக மேப் வழிகாட்டி, பாடல்கள், குறுஞ்செய்தி, அழைப்புகள் என அனைத்தையும் குரல் வழி உத்தரவு மூலம் மேற்க்கொள்ளலாம்.

அடுத்ததாக குரல் வழி தட்டச்சு முறையை பிரசத்தி பெற்ற ஜியோ போன் , ஜியோ போன் 2 போன்ற மொபைல்களில் செயல்படுகின்ற Kaios இயங்குதளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக கூகுள் மெசேஜஸ் என ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படுகின்ற அடிப்படை எஸ்எம்எஸ் மூலமாக அசிஸ்டென்ட் சேவை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் விருப்பமான படங்கள், அருகாமையில் உள்ள உணவகங்கள் மற்றும் வானிலை அறிக்கை பற்றிய பரிந்துரைகளை பயனர்கள் காண முடியும்.

கூகுள் அசிஸ்டென்ட்

எவ்வாறு இது வழங்கப்படுகின்றது என்றால், குறுஞ்செய்தி சார்ந்த உரையாடலை மேற்கொள்ளும் போது செயற்கை அறிவுத்திறன் உதவியுடன் உங்களுக்கு பாப்அப் திரை தோன்றும் அவற்றின் மூலம் அனுமதி வழங்கினால், இதுபோன்ற தகவல்கள் ஆண்ட்ராய்டு மெசேஜஸ் வாயிலாக அனுதிக்கும் போது தனியுரிமை சார்ந்த விபரங்கள் குறித்த சந்தேகம் எழலாம். தனியுரிமை நிலைப்பாட்டில் இருந்து, அது ஒரு பிட் டைஸியை ஒலி செய்கிறது, ஆனால் எந்த உரையாடலின் உள்ளடக்கமும் அசிஸ்டென்ட் சேவைக்கு அனுப்பப்படாது என Google குறிப்பிடுகிறது.

இனி, தமிழில் அதிகான காதல் தொல்லை கூகுள் அசிஸ்டென்ட் சேவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.