உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் 21 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு 21 ஆண்டுகளுக்கு முன்பாக கூகுளின் முகப்பு பக்கம் இருந்ததை நினைவுப்படுத்தும் வகையில் பழைய கணினியில் தேடுபொறி காட்சியளிப்பதனை போன்ற டூடுலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்ட டூடுல் குறிப்பில், 21 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு ஸ்டான்போர்ட் பி.எச்.டி. மாணவர்கள், லாரி பேஜ், மற்றும் சேர்ஜி பிரின், “பெரிய அளவிலான தேடுபொறியின்” முன்மாதிரி ஒன்றைத் தொடங்குவது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.
“நாங்கள் எங்கள் அமைப்புகளின் பெயரான Google தேர்ந்தெடுத்தோம், ஏனெனில் இது googol, அல்லது 10100 என அமைந்திருக்க வேண்டும். ஆனால் எழுத்துப்பிழை காரணமாக Google என்ற பெயர் உருவானது. மிகப் பெரிய அளவிலான தேடுபொறிகளை உருவாக்குவதற்கான எங்கள் குறிக்கோளுடன் பொருந்துகிறது” அந்த மாணவர்கள் எழுதினர்.
இன்று, கூகிள் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்குகிறது, ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான தேடல் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
இதன் அளவுகோல் பெரியது, இங்கே சொல்லப்பட்டது குறைந்தபட்சம்தான்
21 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், கூகிள்!
கூகிளின் பிறந்த தேதி கடந்த ஆண்டுகளில் பல முறை மாற்றப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வரை, பிறந்த தேதி செப்டம்பர் 7 எனக் கூறப்பட்டது, இது ஒரு ஒருங்கிணைந்த நிறுவனமாக மாறிய நாளைக் குறிக்கிறது. இருப்பினும், நிறுவனம் உண்மையில் செப்டம்பர் 4, 1998 அன்று ஒருங்கிணைப்பு ஆவணங்களை தாக்கல் செய்தது. 2005 முதல், செப்டம்பர் 8 அதன் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டது, பின்னர் அது செப்டம்பர் 26 ஆகவும், இப்போது செப்டம்பர் 27 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.