கூகுள் க்ரோம் செயலியில் ஆப்லைன் வசதி வெளியானது

பிரசத்தி பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு என கூகுள் பிரத்தியேகமாக ஆஃபலைன் வாயிலாக இணையத்தை கூகுள் க்ரோம் செயலி மூலம் வழங்கியுள்ளது. க்ரோம் செயலி வாயிலாக இந்த அப்டேட் தற்போது இந்தியா உட்பட 100 நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் க்ரோம் செயலி

இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பரவலாக நாடு முழுவதும் 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டு வந்தாலும் , போதுமான வேகம் கிடைப்பத்தில், பெரும்பாலான மக்கள் வளரும் நாடுகளில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை உணர்ந்து கூகுள் நிறுவனம், தனது பிரசத்தி பெற்ற க்ரோம் செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் வரம்பற்ற வை-ஃபை இணைப்புகளை பெறும்போது தானியங்கி முறையில் நீங்கள் அதிகம் விரும்புகின்ற இணைதளங்களை தரவிறக்கி கொள்ளும். அவ்வாறு தரவிறக்கி கொள்வதனால் இணையத்தை விரும்பும் நேரங்களில் காணுவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளை படிக்க முடியும்.

கூகுள் க்ரோம் உங்களது தினசரி செய்தி பார்வை மற்றும் தேடல்களை கொண்டு உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஆஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.