உங்கள் டேட்டாவை சேமிக்க கூகுள் டேட்டாலி வந்துவிட்டது  - Google Datallyஇணைய தேடுதல் ஜாம்பவான் கூகுள் புதிதாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு டேட்டாவை சேமிக்க என பிரத்தியேகமான கூகுள் டேட்டாலி (Google Datally) செயலி ப்ளே ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது.

கூகுள் டேட்டாலி

கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேட்டாலி செயலி வாயிலாக நிகழ்நேரத்தில் பின்புலத்தில் டேட்டா சேவையை பெறும் செயலிகளை தடை செய்யலாம், இதன் காரணமாக டேட்டாவை சேமிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வளரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மிக இலகுவாக 6MB மட்டுமே பெற்றுள்ளது. நிகழ்நேரத்தில் மொபைல் டேட்டாவை சேமிக்கவும், பொது வை-ஃபை சேவை கிடைக்கும் இடங்களில் அறிவிப்புகளை பெறுவதுடன், எவ்வளவு டேட்டா சேமிக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களை மிக தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

குறைந்த டேட்டா திட்டங்களை பயன்படுத்தும் பயனாளர்களுக்கும் மிகவும் உதவிகரமானதாக கூகுள் டேட்டாலி அமைந்திருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here