விரிச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மாடலான கூகுள் நிறுவனத்தின் ரூபாய் 6,499 விலையில் கூகுள் டேட்ரீம் வியூ விஆர் ஹெட்செட்  இந்தியாவில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கூகுள் டேட்ரீம் வியூ விஆர் ஹெட்செட் விலை ரூ.6499

கூகுள் டேட்ரீம் வியூ விஆர்

கடந்த ஆண்டு கூகுள் I/0 2016 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தபட்ட கூகுள் டேட்ரீம் விஆர் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

தற்போது இந்த வியூ விஆர் ஹெட்செட்  கூகுள் பிக்சல், பிக்சல் எக்ஸ்எல் மற்றும் மோட்டோ இசட் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற நிலையில் கூடுதலாக கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் போன்றவற்றுக்கும் மென்பொருள் மேம்பாடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலகு எடை ஃபைபரிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள டேட்ரீம் வியூ எடை வெறும் 220 கிராம் மட்டுமே.  டேட்ரீம் வீயூ ஹெட்செட் பயன்படுத்துவதற்காகவே இந்த பிளாட்ஃபாரத்தில் யூடியூப் வீஆர், கூகுள் மேப்ஸ், நெட்ஃபீலிக்ஸ் விஆர் , ஹெச்பிஓ கோ, ப்ளே ஸ்டோர் என பிரத்யேகமாக 50 க்கு மேற்பட்ட ஆப்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் டேட்ரீம் வியூ விஆர் ஹெட்செட் விலை ரூ.6499

கூகுள் ஸ்டீரிட் வீயூ மேப் வாயிலாக சர்வதேச அளவில் 50க்கு மேற்பட்ட இடங்களை விரிச்சுவல் ரியாலிட்டி முறையில் காணலாம்.

சிறப்பு சலுகைகள்

5 சதவிகித சிறப்பு விலை சலுகையை ஆக்சிஸ் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும், ரூ.300 கேஸ்பேக் சலுகையை போன்பீ வாயிலாக கிடைக்க உள்ளது. மேலும் முதலில் வாங்கும் 30 வாடிக்கையாளர்களுக்கு கூகுள் க்ரோம்கேஸ்ட் இலவசமாகவும், அதன்பிறகு 50 வாடிக்கையாளர்களுக்கு 500 மதிப்புள்ள ப்ளே ஸ்டோர் கிரெடிட் கிடைக்கும்.

இந்தியாவில் ஸ்லேட் என அழைக்கப்படுகின்ற நிறத்தில் மட்டுமே கிடைக்க உள்ள டேட்ரீம் வியூ பிரத்யேகமாக ஃபிளிப்கார்ட் வாயிலாக ரூ.6,499 விலையில் கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here