www

இன்றைக்கு நாம் பயன்படுத்துகின்ற இணையத்தை அனுக உலகளாவிய வலை ( World Wide Web -www ) எனப்படுகின்ற உலகளாவிய வேர்ல்டு வைடு வெப்க்கு 30 வயதாகின்றது. சர் டிம் பெர்னர்ஸ் லீ (Sir Tim Berners-Lee’s ) அவர்களால் 1989 ஆம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி வலையமைப்பின் மாதிரியை சமர்ப்பித்தார். இவர் சமர்பித்த தினத்தை இணையத்தின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது.

ஆனால் இணையம் எனப்படுகின்ற இன்டர்நெட் என்பது 1960 ஆம் ஆண்டில் இருந்து புழக்கத்தில் உள்ளது. ஆனால் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்கள் வலை என்பதனை உருவாக்கினார். இவருடைய வலை அமைப்பினை ஏற்றுக் கொண்ட பின்னர், இன்றைக்கு வலை இல்லையெனில் உலகம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.

Sir Tim Berners-Lee

உலகளாவிய வலை – டிம் பெர்னர்ஸ் லீ

தென்மேற்கு லன்டனில் 1955 ஆம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி பிறந்த சர் திமொத்தி ஜான் டிம் பேர்னேர்ஸ்-லீ (Sir Timothy John Berners-Lee) பிறந்தார். ”டெலிகிராப்” பத்திரிகை தெரிவுசெய்த வாழும் 100 அறிவாளிகளின் பட்டியலில் பேர்னேர்ஸ்-லீ, ஆல்பர்ட் ஹாப்மனுடன் சேர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

1984 ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CERN) ஆய்வாளராக பணியை தொடங்கினார். இந்நிறுவனம் ஐரோப்பியாவின் மிகப்பெரிய இணைய மையமாக திகழ்ந்தது. 1989 ஆம் ஆண்டு இவர் உருவாக்கிய மீயுரை (HTTP) திட்டத்தை இணையத்துடன் இணைத்து உலகளாவிய வலை எனும் வேர்ல்டு வைடு வெப் உருவாக்கி பிரவுசர் மூலம் அனுகும் வகையிலான முயற்சியை மேற்கொண்டார்.

இவருடைய முயற்சியின் பலனாக 1990 ஆம் ஆண்டு உலகளாவிய வலை தயார் ஆனது. அதனை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி உலகின் முதல் வலை தளம் Info.cern.ch என்ற பெயரில் அதிகார்வப்பூர்வமாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இன்றைக்கும் உலகின் முதல் வலை தளம் Info.cern.ch பயன்பாட்டில் உள்ளது. இந்த வெப்சைட்டை நீங்கள் இப்போதும் அனுகலாம்.

world first website screenshot

வேர்ல்டு வைடு வெப் மூலம் உரலி URL (uniform resource locator) , அடுத்து மீயுரை HTTP (hypertext transfer protocol) மற்றும் கணினியில் நாம் காண உதவும் மீயுரை குறியீடு மொழி அதாவது ஆங்கிலத்தில் இன்று நாம் காண்கின்ற இணையத்தின் பின்புலமாக உள்ள HTML (hypertext markup language) என இந்த மூன்றையும் உள்ளடக்கியதே WWW ஆகும். இதனை நாம் வெப் பிரவுசர் மூலம் அனுக முடிகின்றது.

உலக வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக WWW கருதப்படுகின்றது. உலகளாவிய வலைச் சேர்த்தியம் எனப்படும் (World Wide Web Consortium, W3C) உருவாக்கியவர் டிம் பேர்னேர்ஸ்-லீ ஆவார்.

டிம் பெர்னேர் லீ அவர்கள் உருவாக்கிய இணையத்தின் நோக்கம் இது தான்..

இணையம் என்பது கலாச்சாரம் மற்றும் புவியியல் சார்ந்த எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒருவருக்கொருவர், செய்திகளைப் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான திறந்த மேடையாக இருக்க வேண்டுமென்ற கற்பனை செய்திருந்தேன் என குறிப்பிடுகின்றார்.

ஆனால் இன்றைக்கு சமூக வலைதளங்கள் பல்வேறு நல்ல நோக்கங்களை நிறைவேற்றினாலும் பயன்படுத்துகின்ற சில தீயவர்களால் , இன்றைக்கு குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதனை உங்களால் நிச்சியமாக மறுக்க இயலாது என நம்புகிறோம்.

30th Anniversary of the World Wide Web

உலகளாவிய வலை பற்றிய கூகுள் டூடுல்

இன்றைக்கு இணையத்தில் முதன்மையான வலைதளமாக விளங்கும் கூகுள் நிறுவனம், இதனை கௌரவிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பழைய கணினியை பின்புலமாக கொண்டு இணையத்தினை அனுகவதனை போல டூடுலை வெளியிட்டுள்ளது.

இன்றைக்கு உலகயளவில் சுமார் 2 பில்லியனுக்கு அதிகமான இணையதளங்கள் செயற்பாட்டில் உள்ளன. புதிய தலைமுறையினரின் ஒவ்வொரு தேவைக்கும் , அதாவது இமெயில், கேம், செய்திகள், வீடியோ மேலும பல., என அனைத்திற்கும் வலைதளங்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன.

உலகளாவிய இணையக் கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி ஜெஃப்ரி எம் ஜஃப் கூறுகையில், ”ஒரு சில கண்டுபிடிப்புகளே, உண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை தந்துள்ளன ” அது போல ”வலை நம் காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் நம்மை இணைத்த உலகளாவிய வலை-க்கு 30வது பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் உங்கள் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளம்..!

தொடர்ந்து Gadgets Tamilan News படிக்க மற்றும் ஃபேஸ்புக்கில் Facebook.com/gadgetstamilan எங்களை விரும்ப மற்றும் டிவிட்டரில் twitter.com/gadgetstamilan எங்களை பின் தொடருங்கள்..!