கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்ற புவி நாள் (Earth Day) வாழ்த்துகளுடன், கூகுள் இன்றைக்கு வெளியிட்டுள்ள டூடுல் மூலம் ஆறு உயிரினங்களில் உள்ள பிரமிக்கும் வகையிலான சிறப்பு அம்சங்களை தனது முகப்பில் பகிர்ந்து கொண்டுள்ளது. #GoogleDoodle

புவியில் அற்புதமான பிரமிக்கும் திறன்களை கொண்ட உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில், அதனை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். புவி மாசுப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

புவி நாள் வாழ்த்துக்கள்

1969 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் சாந்தா பார்பரா நகர் அருகே நிகழ்ந்த மிகப்பெரிய எண்ணெய்க்கசிவின் காரணமாக எண்ணற்ற உயிரினங்கள் பாதிப்புக்குளாகியது.  இதன் காரணமாக சுற்றுச்சூழல் அழிவு தவிர்க்கும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகக் கேலார்ட் நெல்சன் தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன் முதலில் முன்மொழிந்தார்.

ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

இன்றைய கூகுள் டூடுல் சிறப்புகள்

இன்றைக்கு கூகுள் டூடுல் முகப்பை அலங்கரித்துள்ள புவி நாளுக்கான டூடுல் மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் , புவியில் வாழுகின்ற உயிரினங்களில் சிலவற்றை தனது முகப்பில் வெளியிட்டுள்ளது. அவற்றின் பட்டியல் பின் வருமாறு..!

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

1 . பெரிய வென்னிற அல்பட்ராஸ் (Wandering albatross)

உலகில் வாழுகின்ற பறவைகளில் மிக நீளமான இறக்கை கொண்ட அல்பட்ராஸ் ஒரு கடற்பறவை ஆகும். இது பெரும்பாலும் தென்கடல் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. இந்த பறவைகள் ஆண்டுக்கு 1,20,000 கிமீ பயணிக்கின்றன.

2. கலிஃபோர்னியா உசியிலை மரம் (Coastal Redwood)

அதிகபட்சமாக 379 அடி உயரம் வளரக்கூடிய உலகின் மிகவும் உயரமான மரமாக இந்த கலிஃபோர்னியா உசியிலை மரங்கள் விளங்குகின்றது.

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

3. பீடோஃபிரினோ அமௌன்சீஸ் (Paedophryne amauensis)

உலகில் வாழுகின்ற தவளை இனங்களில் முதுகெலும்பில்லாத மிகச்சிறிய தவளை ஆகும். 2009 ஆம் ஆண்டு முதன்முறையாக கண்டுபிடிக்கபட்ட இந்த தவளையின் நீளம் 7.7 mm (0.30 in) மட்டும் ஆகும்.

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

4. அமேசான் அல்லி (Amazon Water Lilly)

அமேசானில் உள்ள உலகின் மிகப்பெரிய அல்லி மலராகும். நீரில் உள்ள மிகப்பெரிய லில்லியான இதில் ஒரு சிறிய குழந்தை அமரலாம். மூன்று மீட்டர் நீளம் கொண்ட இலையை இந்த அல்லி கொண்டிருக்கின்றது.

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

5. சீல்காந்த் (Coelacanth)

உலகின் மிக அரிதான மீன் வகைகளில் ஒன்றான சீல்காந்த் 407 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது. உயிருடன் வாழ்கின்ற விலங்கினத்தில் மிகவும் பழமையானதாகும். சீல்சாந்த் டைனோசர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

6. குகைவாழ் ஸ்பிரிங்டெயில் (Deep cave springtail) 

மிகவும் ஆழமான குகைகளில் வாழ்கின்ற இந்த கண் இல்லா உயிரினமாகும்.

கூகுள் வெளியிட்ட 2019 புவி நாள் டூடுல் சிறப்புகள் பற்றி தெரியுமா.!

நம் உலகில் வாழுகின்ற உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த புவி நாளை கொண்டாடுவோம் என வாழ்த்துக்களுடன் கேட்ஜெட்ஸ் தமிழன் இணையதளம்..!