ஹோல் பஞ்ச் வரலாற்றை கொண்டாடும் கூகுள் டூடுல்

டிஜிட்டல் உலகிலும் தொடர்ந்து மிக அவசியமான தேவையாக உள்ள ஹோல் பஞ்ச் 131வது ஆண்டு வரலாற்றை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

Ads

கடந்த 131 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள துளையிடுகின்ற பஞ்ச் மெஷின், இன்றைய நவீன டிஜிடல் உலகத்திலும் லட்சக்கணக்கான மக்களால் தினந்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஹோல் பஞ்ச்

நவம்பர் 14, 1886 ஆம் ஆண்டு முதன்முறையாக ஹோல் பஞ்ச் செய்யும் மெஷினுக்கு காப்புரிமை ஜெர்மனி நாட்டின் ப்ரீட்ரிக் ஸோனெக்கென் என்பவர் பதிவு செய்தார். ஜெர்மனியில் உருவான இந்த நுட்பம் பல்வேறு வகையிலான பயன்பாட்டை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இன்றைய டிஜிட்டல் உலகில் பல்வேறு மாறுபாடுகளை பெற்றிருந்தாலும், அலுவலக பயன்பாடு, பள்ளிகள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஹோல் பஞ்ச் மெஷினை அடிப்படையாக கொண்டு துளையிட்ட பேப்பர் துண்டுகளை பின்னணியாக கொண்டு கூகுள் டூடுள் மிக நேர்த்தியான வகையில் கெர்பென் ஸ்டீனக்ஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.

 

Comments

comments