இன்றைய கூகுள் டூடுல் 140 வருடத்திற்கு முன்னதாக அதிகார்வப்பூர்வமாக நடந்த உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. முதல் போட்டி இங்கிலாந்தின் இங்கலீஷ் அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது.

முதல் டெஸ்ட் கிரிக்கெட்

  • அதிகார்வப்பூர்வமாக 15 மார்ச் 1877-ம் தேதி  இங்கலீஷ் அணி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி தொடங்கியது.
  • இரு ஆட்டங்களை கொண்ட இந்த தொடரில் 45 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது.
  • இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது.

15 மார்ச் 1877 அன்று இங்கிலாந்தின் இங்கீலிஷ் அணி மற்றும் ஆஸ்திரேலியா சார்பில் உருவாக்கப்பட்ட முதல் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தொடங்கிய சர்வதேச முதல் டெஸ்ட் போட்டி தொடர் மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெற்றது.

4 நாட்கள் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணி வெண்றது.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றதனால் இரு ஆட்டங்களை கொண்ட இந்த தொடர் சமன் செய்யப்பட்டது.

இதனை நினைவுப்படுத்தும் வகையில் இணைய உலகின் முதன்மையான தேடல் இயந்திரமான கூகுள் இன்றைய டூடுல் படத்தை வெளியிட்டுள்ளது.