இந்தியாவின் முதல் பெண் வக்கீல் - கோர்னீலியா சொராப்ஜிஇந்தியாவின் முதல் பெண் வக்கீல் என்ற பெருமைக்குரிய கார்னெலியா சோராப்ஜி அவர்களின் 151 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் கொண்டு முகப்பு பக்கத்தை கூகுள் அலங்கரித்துள்ளது.

கூகுள் டூடுல் – கோர்னீலியா சொராப்ஜி

இந்தியாவின் முதல் பெண் வக்கீல் - கோர்னீலியா சொராப்ஜி

இந்தியாவின் முதல் பெண் வழக்குறிஞர் என்ற பெருமைக்குரிய கார்னெலியா சோராப்ஜி அவர்கள் பல்வேறு விடயங்களில் முதல் பெண்மனியாக விளங்குகின்றது.

தற்போது மும்பை பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகின்ற பம்பாய் பல்கலைகழகத்தின் முதல் பெண் பட்டதாரி ஆகும், இதுதவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மனி ஆவார், மேலும் இந்தியர்களில் முதல் முறையாக பிரிட்டீஷ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய நாட்டவர் என்ற பெருமைக்குரியவராக சோராப்ஜி விளங்குகின்றரார்.

1866 ஆம் ஆண்டு நவம்பர் 15ந் தேதி மும்பை அருகே அமைந்துள்ள நாசிக் நகரில் பிறந்த சோராப்ஜி சமூக சீர்திருத்தங்கள், பெண் உரிமை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தீவரமாக ஈடுபட்டார்.

இந்தியாவின் முதல் பெண் வக்கீல் - கோர்னீலியா சொராப்ஜி

சட்டம் பயின்று இருந்தாலும் பெண்கள் வக்கீலாக ஆஜாராவதற்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட வந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த வழக்குகளில் இலவச சட்ட ஆலோசனை வழங்குபவராக விளங்கி வந்த சோராப்ஜி அவர்களுக்கு, 1904 ஆம் ஆண்டில் வங்காள கோர்ட் வார்டில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இறுதியாக, 1924 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவின் முதல் பெண் வக்கீலாக சட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.

எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ள சோராப்ஜி சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றுடன் தனது சுயசரிதையை Between the Twilights என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here