இன்றைய கூகுள் டூடுல் - பேகம் அக்தர் 103 வது பிறந்த நாள்முன்னணி தேடுதல் நிறுவனமான கூகுள் டூடுல் வாயிலாக தனது முகப்பு பக்கத்தை பிரசத்தி பெற்ற கசல்களின் இராணி என அழைக்கப்படுகின்ற பேகம் அக்தர் அவர்களின் 103 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேகம் அக்தர்

இன்றைய கூகுள் டூடுல் - பேகம் அக்தர் 103 வது பிறந்த நாள்

பேகம் அக்தர், 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ல் உத்தரப் பிரதேச மாநிலம் பாசியாபாத்தில் பிறந்தார். இவர் தனது ஏழு வயது முதல் புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களான அதா முகமது கான் (பாட்டியாலா கரனா), அப்துல் வாகித் கான் (கிரனா கரனா) ஆகியோரிடம் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர்.

தும்ரி, தாத்ரா இசையை பாடுவதில் தனக்கென பெயரை பெற்றவர் பேகம் அக்தர். அதிலும், பூரப் மற்றும் பஞ்சாபி வகை இரண்டையும் கலந்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே. அவர் பாடும் கஜல் இசை தனித்துவமானது.

இவருக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்த சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம ஶ்ரீ மற்றும் பத்ம பூசண் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை வெளியிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here