இந்தியாவை சேர்ந்த வானியில் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்களின் 107 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சந்திரசேகர்

தற்போது பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள லாகூரில் அக்டோபர் 19 , 1910 ஆம் ஆண்டு பிறந்த இவர், வானியல் மற்றும் இயற்பியில் துறையில் மிகுந்த திறன் மிக்கவராக விளங்கியவராகும்.

தந்தையார் சுப்ரமணிய ஐயர் அரசாங்க நிதித்துறையில் வேலை பார்த்து வந்தார்.  தாயார் சீதா பாலகிருஷ்ணன் பிள்ளைகள் பிற்காலத்தில் பேரறிஞர்களாக வருவதற்கு ஊக்கம் அளித்தவர்.  பத்துக் குழந்தைகளில் சந்திரசேகர் மூன்றாவதாகப் பிறந்த முதல் ஆண் குழந்தையாகும்.  1918 இல் தந்தையார் சென்னைக்கு மாற்றலானதும், சந்திரசேகர் சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து [1922-1925] படித்துச் சிறப்பாகச் தேர்ச்சி அடைந்தார்.

பிறகு இவரது பெரியப்பா சி.வி. ராமன் அவர்களைப் பின்பற்றிச் சென்னை பிரிசிடென்ஸிக் கல்லூரியில் படித்து, 1930 இல் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் B.Sc. பட்டதாரி ஆனார்.

சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு இறந்துபட்ட விண்மீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இதனை மையமாக கொண்டே இன்றைய கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here